வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
திருத்தல பேராலயம்
வேளாங்கண்ணி
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் அழகு திருமுகம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய வரலாறு:
வங்கக்கடலோரம் பனை மரச்சோலையில் அமைதியான சூழலிலே அமைந்திருப்பதுதான்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்.அனைத்துலகு புகழ்பெற்ற இந்த
மரியன்னையின் திருத்தலம் "கீழை நாடுகளின் லூர்து நகர் "என்று பெருமையோடு
அழைக்கப்படுகிறது,இத்திருத்தலம் தஞ்சை மறை மாவட்டத்தின் கலங்கரை தீபமாக
திகழ்கிறது.இந்த திருத்தலத்திற்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்
மட்டுமல்ல,எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான மக்கள் திரண்டு
வந்து,அன்னையின் அன்பைப் பருகி செல்கிறார்கள்.அவதியுறும் மக்களை அரவணைத்து
தேற்றி வரும் அத்தாயின் பரிவையும் பாசத்தையும் அனுபவித்து மகிழ்ந்து
நெகிழ்ந்து போகிறார்கள்.நாகரீக பழமையும் ,ஆழ்ந்த ஆன்மீகமும் நிறைந்த
இந்திய திரு நாட்டில் அமைந்திருக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
திருத்தல பேராலயம்,பண்பாட்டினாலும் ,மொழியினாலும் ,சமயத்தினாலும்
வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணிய பூமியாக திகழ்ந்து
வருகிறது.மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஈடு இணையற்ற சான்றாக நின்று
மிளிர்கிறது வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்.
அன்று எவருக்கும் தெரியாத சிற்றூராக வங்கக்கடலோரம் இருந்த
வேளாங்கண்ணி இன்று உலக புகழ்பெற்ற திருத்தலமாக வளர்ந்து உயர்ந்து
இருக்கின்றது எப்படி என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருக்கலாம்.இத்தகைய
மாட்சிமிக்க வளர்ச்சிக்கு காரணமென்ன? பலருக்கும் தெரியாத இச்சிற்றூரை
மாதாவே தேர்ந்தெடுத்து காட்சி தந்து ஒப்பற்ற திருத்தலமாக அதுவும் உலக
புகழ்பெற்ற மரியன்னையின் திருத்தலமாக மாற்றி இருக்கிறார் என்பதில்
எள்ளவும் ஐயமில்லை .
வேளாங்கண்ணி
ஆரோக்கிய அன்னை திருத்தலம்
( நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு) இந்தியாவில்
உள்ள பெருமை மிகு புகழ்
மிகு கத்தோலிக்க
திருத்தலமாகும். இவ்வாலயம் புனித ஆரோக்கிய அன்னையின்
பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த
மூன்று புதுமைகளினால் இங்கே வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று.
முத்தான மூன்று
புதுமைகள்:
1.பால் விற்ற இடையர்
குல சிறுவனுக்கு காட்சி தந்தார் வேளாங்கண்ணி
ஆரோக்கிய மாதா
ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் நாகபட்டினத்திலிருந்த ஒரு
செல்வந்தருக்கு வேளாங்கண்ணி யில் வாழ்ந்த ஒரு இடையர் குல சிறுவன்
ஒருவன்,ஒவ்வொரு நாளும் பால் கொண்டு போய் கொடுப்பது வழக்கம்.ஒரு நாள்
அதேபோல் கொண்டு போகும்போது ,கடுமையான வெப்பம் தாக்கவே ,அந்த சிறுவன் சற்று
இளைப்பாறும் விதமாக அங்கே இருந்த ஒரு ஆல மரத்தின் நிழலில் குளத்துக்கு
அருகே சற்று ஒய்வு எடுத்தான்,அப்போது சூரியனை விட அதிக ஒளி ஒன்று அவன்
முகத்தில் பட்டது,உடனே கண் விழித்தான் அந்த சிறுவன்.அங்கே அவன் கண்ட
காட்சி..விண்ணக அழகு நிறை அன்னை தெய்வீக திருக்குழந்தையை கையில்
ஏந்தியவராய் திருக்காட்சி தந்தார்.அந்த அன்னை தாய்மை புன்னகை தவழ தனது
குழந்தைக்கு கொஞ்சம் பால் தருமாறு அந்த சிறுவனை கேட்டார்,,விண்ணக அழகிலே
மிதந்து வந்த அத்தாயின் வேண்டுதலை சிறுவனால் புறக்கணிக்க
முடியவில்லை,அச்சிறுவனும் பால் கொடுக்க ,அந்த குழந்தையும்
பருகியது .சில வினாடிகளில் அந்த தேவ அன்னையும் ,அத்திரு குழந்தையும்
அந்த இடத்திலிருந்து மறைந்தது.நாகை யில் உள்ள செல்வந்தரின் வீட்டுக்கு
வந்ததும் ,அந்த சிறுவன் தான் காலம் தாழ்த்தி வந்ததர்க்காகவும் பாலின் அளவு
குறைந்து இருப்பதற்காகவும் செல்வந்தரிடம் மன்னிப்பு வேண்டினான்,சிறுவன்
இவ்வாறு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே என்ன ஆச்சரியம் !சிறுவன் சுமந்து
வந்த பால் குடம் நிறைந்து வழிந்தோடியது.இதை பார்த்த செல்வந்தர் அந்த
சிறுவனிடம் சற்று விளக்கமாய் கேட்டார்,அச்சிறுவனும் தான் வரும் வழியில்
விண்ணக அழகை மிஞ்சும் தாய்,தன் குழந்தையுடன் தனக்கு காட்சி தந்ததையும்
அத்தாயின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த தெய்வீக குழந்தைக்கு சிறிதளவு பால்
கொடுத்ததையும் சொல்லி முடித்தான் அப்போதும் பால் நிரம்பி வழிவது
நிற்கவில்லை,உடனே அந்த செல்வந்தர் சிறுவன் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து
வந்தார்,அன்னை காட்சிதந்த அந்த இடத்தில் இருந்த ஆல மரமும் அந்த குளமும்
சற்று வித்தியாசமாக தான் தெரிந்தது அந்த செல்வந்தருக்கு,உடனே அவர் அப்புனித
தலத்தில் தாழ் பணிந்து வணங்கினார்,சிறிது காலத்தில் தெய்வீக தாய் காட்சி
அளித்த அத்திருவிடத்தில் சிற்றாலயம் எழுப்பப்பட்டது,அதுவே இன்று நம் முன்
சாட்சியாய் நிமிர்ந்து நிற்கும் பழைய வேளாங்கண்ணி-மாதா குளம்,அன்று மாதா
காட்சி கொடுத்த அந்த குளத்து நீர்தான் இன்று வேளாங்கண்ணி-மாதா குளத்து
தீர்த்தமாக பக்தர்களால் பக்தியோடு பருக படுகிறது ,மருத்துவரால் கைவிடப்பட்ட
பல நோய்கள் பிணிகள் தீர்க்கும் அரு மருந்து வேளாங்கண்ணி-மாதா தீர்த்தம்.
2. மோர் விற்ற, கால் முடமான சிறுவனுக்கு காட்சி தந்து ,சுகப்படுத்தினார் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதாவின் ,இரண்டாவது காட்சி
வேளாங்கண்ணி சிற்றுரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில்
நடைபெற்றது,அங்கே கால் ஊனமுற்ற ஒரு சிறுவன்,மோர் வியாபாரம் செய்து
வந்தான்,அப்போது ஒரு நாள் மீண்டும் எழில் மிகு தோற்றத்துடன் வேளாங்கண்ணி
மாதா தனது குழந்தை யேசுவுடன் காட்சி தந்து தனது குழந்தைக்கு சிறிதளவு மோர்
தருமாறு கேட்டார்.தாயின் பேரழகையும் ,குழந்தையின் தெய்வீக திருமுகத்தையும்
கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன் குழந்தைக்கு மகிழ்வுடன் மோர்
வழங்கினான்.அப்போது அந்த பேரழகு பெட்டக தாய் ,அந்த கால் ஊனமுற்ற
சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார்.."மகனே உடனே நாகபட்டினம் சென்று அங்கே
வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த
இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக
"என்றார் ,ஆனால் அந்த சிறுவனோ தான் கால் ஊனமுற்றவன் என்னால் எப்படி அம்மா
போக முடியும் என்ற ஏக்க பார்வையோடு வேளாங்கண்ணி மாதா வை
பார்க்கிறான்,அவனின் ஏக்கத்தை புரிந்துகொண்ட வேளாங்கண்ணி மாதா "மகனே
எழுந்து நட "என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார் மரியன்னை ,உடனே அந்த
சிறுவனின் ஊனமுற்ற கால்களிலே ஒரு புது ரத்தம் பாய்வது போல் தோன்றியது அந்த
சிறுவனுக்கு,உடனே எழுந்தான் ,நடந்தான்,ஓடினான் ,அந்த சிறுவனின் ஓட்டம்
நாகபட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது
,வீட்டிற்க்கு சென்று நடந்ததை சொன்னான் ,அவனின் வார்த்தைகளை கேட்டு
ஆச்சரியம் அடைந்தார் கத்தோலிக்க கிறிஸ்தவர்.அதற்க்கு முந்தைய இரவில் அந்த
கத்தோலிக்க கிறிஸ்தவர்
கனவில் வேளாங்கண்ணி மாதா தோன்றி ஆலயம் கட்ட சொன்னதை நினைவு
கூர்ந்தார்,உடனே அந்த சிறுவனுடன் வேளாங்கண்ணி மாதா கட்சி கொடுத்த அந்த
இடத்திற்கு வந்தவுடன், தெய்வீக தாயின் குரலும் கேட்டது ..மகனே இந்த
இடத்திலேயே ஆலயம் கட்ட வழி செய்வாயாக ..இதை கேட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்
ஊர் மக்களின் உதவியுடன் அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டிமுடித்தார் ,அதுவே இன்று
நாம் காணும் வேளாங்கண்ணி மாதா வீற்றிருக்கும் பேராலயம்
3. புயலில் சிக்கிய
போர்சுகீசிய மாலுமிகளின் கப்பலை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரை சேர்த்தார் வேளாங்கண்ணி
ஆரோக்கிய மாதா
கி பி 17 ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி-மாதா வின் மூன்றாவது புதுமை
நிகழ்ந்தது.அப்போது சீனாவில் உள்ள மாக்கொவிலுருந்து போத்துக்கீசிய வியாபார
பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது,வழியில்
கடுமையான புயலால் அந்த கப்பல் தாக்கப்பட்டது ,அந்த கப்பலில் இருந்த
மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் கடலில் மூழ்கபோகிறோமே என்று
பயந்து அஞ்சி நடுங்கினார்கள் ,புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல்
மூழ்கும் நிலை நெருங்கியது,அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி
மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள் ,அம்மா மரியே ,எங்களை
இந்த கடும் புயலிலிருந்து காப்பாற்றும் ,நாங்கள் நலமுடன் கரை சேரும்
இடத்தில் கன்னி மரியே உனக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என நேர்ந்து
கொண்டார்கள் ,சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோசம் குறைய
தொடங்கியது,அவர்களின் புயலில் சிக்கிய கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது
,அன்றைய தேதி செப்டம்பர் 8,அன்று கன்னி மரியின் பிறந்த நாள் ,கப்பல் கரை
சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை.மாலுமிகள் தாங்கள் நலமுடன் வந்து
சேர்ந்ததற்காக இறைவனுக்கும் ,கன்னி மரியாவிற்க்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி
செலுத்தி ,நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று
எழுப்பினார்கள்.போர்சுகீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை
வழியாக செல்கிறார்களோ அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தாங்கள் கட்டிய
சிற்றாலயம் வந்து வணங்கி செல்வது வழக்கம் ,அப்படி வரும் பொது ஒருமுறை
தாங்கள் கட்டிய சிற்றாலயத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு அந்த மாலுமிகள்
தாங்கள் கொண்டு வந்த பீங்கான் ஓடுகளை வேளாங்கண்ணி-மாதா ஆலய பீடத்தில்
பதித்து ஆலயத்தை அழகு படுத்தினார்கள்,அந்த பீங்கான் ஓடுகளில் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் வாழ்கை நிகழ்வுகள் அழகான முறையில் வண்ணம் தீட்ட
பட்டுஉள்ளன.அவை வேளாங்கண்ணி-மாதா திருத்தல பீடத்தை அலங்கரிக்கும் அழியா
ஓவியங்களாக இறவா காவியங்களாக இன்றும் காணப்படுகிறது வேளாங்கண்ணி-மாதா
பீடத்தில்.
இவ்வாலய
விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த
நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த
புதுமை நடந்த நாளுமான செப்டம்பர்,
08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு,
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில்
உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது
என்பது குறிக்கத்தக்கது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின்
திருபீடம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் ஜெபம்
புனித
மரியே,மாசில்லா கன்னிகையே !யேசுவின் தாயாக மூவொரு கடவுளால் தெரிந்து
கொள்ளப்பட்டவளே !துன்ப படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையே!உமது
தெய்வீக திருமகனின் அளவற்ற வல்லமையை நம்பி,உமது வல்லமை நிறைந்த
மன்றாட்டுகளில் உறுதி கொண்டு ,இந்த நவநாளின் போது நான் கேட்கும்
மன்றாட்டுக்கள் தெய்வ திருவுளத்திற்கு ஏற்றவையானால் உன் திருமகன்
யேசுவிடம் பரிந்து பேசி என் மன்றாட்டுகளை எனக்கு நிறைவேற்றி தாரும்
(நமது தேவைகளை வேளாங்கண்ணி மாதாவிடம் சொல்லவும் )
இறைவனின்
மாட்சி பெற்ற அன்னையே "அருள் நிறைந்தவள் " என்று அன்று அதி தூதர்
கபிரியேல் சொல்லும் போது அவர் கொண்டிருந்த அதே பணிவு வணக்கத்துடன் நானும்
இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன்;அன்புடன் ஏற்றுகொள்ளும் .
(ஒன்பது முறை பின்வரும் அருள் நிறைந்த மரியே வாழ்க ஜெபம் சொல்லவும் )
அருள்
நிறைந்த மரியே வாழ்க!கர்த்தர் உம்முடனே ,பெண்களுக்குள்
ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே;உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும்
ஆசிர்வதிக்கபட்டவரே.
அர்ச்சிஷ்ட மரியே !சர்வேஸ்ரனுடைய மாதாவே,பாவிகளாயிருக்கிற
எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் -ஆமென்.
வருந்துவோருக்கு
ஆறுதலே! நான் இப்போது கேட்ட மன்றாட்டுக்கள் நிறைவேறுமாறு எனது
நற்செயல்களையும் நான் ஏற்கும் துன்பங்களையும் ஒறுத்தல் முயற்சிகளையும்
உமக்கு ஒப்பு கொடுக்கிறேன்.உமது திருமகனிடம் உம் அடியான் எனக்காக பரிந்து
பேசி என் மன்றாட்டுகளை அடைந்து தந்தருளும் வேளாங்கண்ணி மாதாவே-ஆமென்
மிகவும் இரக்கமுள்ள தாயே,இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி
வந்து உமது உபகார சகாயங்களின் உதவியை இரந்து கேட்ட ஒருவராகிலும் உம்மால்
கைவிடப்பட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விபட்டது இல்லை என
நினைத்தருளும்.கன்னியரின் அரசியான கன்னிகையே ,தயையுள்ள தாயே,இப்படிப்பட்ட
நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருபாதத்தை அண்டி வந்து நிற்கிறேன்
.பெருமூச்செறிந்தழுது,பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு
உமது சமூகத்திலே நிற்கிறேன்.அவதரித்த வார்த்தையின் தாயே, வேளாங்கண்ணி
புனித ஆரோக்கிய மாதாவே,என் மன்றாட்டை புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டு
கிருபை புரிந்தருளும்.ஆமென்
அன்னை மரியா ஆண்டவர் இயேசுவின் தாய் :
இயேசுவின் தாயான மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தோன்றிய இடங்களின் பெயரால், லூர்து மாதா, பாத்திமா மாதா, குவாடலூப்பே மாதா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். உலகின் பல இடங்களில் தோன்றிய அன்னை, இந்தியாவில் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின்
திருபீடம்
வேளாங்கண்ணி மாதாவிற்கு ஆரோக்கிய அன்னை என்று பெயர் வர காரணம் :
வேண்டுதல் செய்யும் அனைவரின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால்
ஆரோக்கிய அன்னையாக திகழ்கிறார்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின்
திருபீடம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின்
திருபீடம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின்
திருபீடம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
திருத்தல பேராலயத்தி ன் எழில் மிகு தோற்றம்
புயலில் சிக்கிய போர்சுகீசிய மாலுமிகளின் கப்பலை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரை சேர்த்தார் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
அந்த காலத்தில், இந்தியாவுக்கு பாய்மரக் கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் சிலர் நடுக் கடலில் வீசியப் புயலில் சிக்கிக் கொண்டனர். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த அவர்கள், அன்னை மரியாவிடம் உதவி கேட்டனர். `அம்மா, நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஒரு ஆலயம் கட்டுவோம்' என்றும் வாக்குறுதி அளித்தனர். மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் ஓய்ந்தது. கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8ந்தேதி, தேவமாதாவின் பிறந்த நாள். தங்களை பத்திரமாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். கலை வண்ணமிக்க பீங்கான் ஓடுகளால் ஆலயப் பீடத்தை அலங்கரித்தனர். தங்கள் கப்பலின் பாய்மரத் தூணை ஆலயக் கொடிமரமாக நட்டினர். அதில்தான் இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. போர்ச்சுக்கீசியர்கள் கரை சேர்ந்த நாளான மாதாவின் பிறந்த நாளிலேயே வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.’
தொடக்கத்தில் நாகப்பட்டினம் கிறிஸ்தவப் பங்கின் துணை ஆலயமாக வேளாங்கண்ணி இருந்து வந்தது. 1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வேளாங்கண்ணி திருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பேராலயம் " (minor basilica என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பேராலயம் " நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,விடியற்காலை விண்மீன் ஆலயம் என்ற புதிய ஆலயம் அர்ச்சிக்க பட்டது
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
திருத்தல பேராலயத்தி ன் எழில் மிகு தோற்றம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
திருத்தல பேராலயத்தி ன் எழில் மிகு தோற்றம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
திருத்தல பேராலயத்தி ன் எழில் மிகு தோற்றம்
விரிவாக்கப்பட்ட பேராலயம்
(EXTENSION BASILICA)
விரிவாக்கப்பட்ட பேராலயம்
(EXTENSION BASILICA)
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
திருத்தல பேராலயத்தி ன் எழில் மிகு முகப்பு தோற்றம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
திருத்தல பேராலயத்தி ன் எழில் மிகு தோற்றம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின்
திருபீடம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின்
திருபீடம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின்
திருபீடம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு ஒரு புதிய ஆலயம்
விடியற்காலை விண்மீன் பேராலயம்
மாதா
குளம் நோக்கி செல்லும் புனித பாதையின் வலப்புறத்தில் அன்னைக்காக
கட்டப்பட்டுள்ளது புதிய விடியற்காலை விண்மீன் பேராலயம்,400 அடி நீளம்,138
அடி அகலம்,40 அடி உயரம் என்று வடிவமைப்புடன் கூடிய இந்த விடியற்காலை
விண்மீன் பேராலயம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் புதுமைகளுக்காக
எழுப்பப்படும்
இந்த புதிய ஆலயத்தின் முகப்பு திருத்தல பேராலய முகப்பை போலவும்
,மொத்தமாக பார்க்கும்போது ஒரு அழகான சிப்பியை போன்று தோற்றமளிக்க கூடிய
வகையில் போர்சுகீசிய கட்டிடகலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் அழகு திருமுகம்
வேளாங்கண்ணி மாதா பாடல்கள்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடல்கள்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் அழகு திருமுகம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் அழகு திருமுகம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் அழகு திருமுகம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் அழகு திருமுகம்
வேளாங்கண்ணி மாதா வின் ஆண்டு திருவிழா 2014 கொடியேற்றம்
ஆராதனை ஆலயம்
ஜெபிக்க,தியானிக்க ஏற்ற இடம்
திருத்தலத்திற்கு வரும்
திருப்பயணிகள் ஜெப அனுபவம் பெறவேண்டும் என்பதற்காக நற்கருணை ஆலயமும்
,ஆராதனை ஆலயமும் அதனுடன் இணைந்த ஒப்புரவு அருட்சாதன ஆலயமும்
உருவாக்கப்பட்டு உள்ளன.இந்த ஆலயத்தில் ஜெப ஊற்று ,ஆலோசனை மையம் ஆகியவை
இயங்கி வருகின்றன.மாதா குளம் செல்லும் பாதையில் ஒருபுறம் சிலுவைப்பாதை
ஸ்தலங்களை விவரிக்கும் சுரூபங்களும் மறுபுறம் ஜெபமாலை சொல்லும் வகையில்
ஜெபமாலை மறை உண்மைகளை சொல்லும் சுரூபங்களும் மாடங்கள் வடிவத்தில் அழகுற
அமைக்க பட்டு உள்ளன.பொது நிலையினரும் இறை அனுபவம் பெரும் வகையில் அமைதியான
சூழலில் திருத்தல தியான இல்லம் இயங்கி வருகிறது.ஜெபதேவைகளுக்கு ஜெப ஊற்று
மையத்தோடு தொடர்புகொள்ள வேண்டிய தொலை பேசி எண்.
ஆராதனை ஆலயம்
ஆராதனை ஆலயம்
ஆராதனை ஆலயம்
ஆராதனை ஆலயம்
ஒப்புரவு திருவருட்சாதனம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
மோர் விற்ற கால் முடமான சிறுவனுக்கு
காட்சி கொடுத்த
காட்சி கொடுத்த
நடுதிட்டு ஆலயம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
மோர் விற்ற கால் முடமான சிறுவனுக்கு காட்சி கொடுத்த
நடுதிட்டு ஆலயம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
மோர் விற்ற கால் முடமான சிறுவனுக்கு காட்சி கொடுத்த
நடுதிட்டு ஆலயம்
மோர் விற்ற, கால் முடமான சிறுவனுக்கு காட்சி :
தனது முடமான மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மீண்டும் காட்சி அளித்தார். நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவனுக்கு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தோன்றினார். `மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். `அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். `உன்னால் முடியும்' என்றார் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை செல்வந்தருக்கு காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
மோர் விற்ற கால் முடமான சிறுவனுக்கு காட்சி கொடுத்த
நடுதிட்டு ஆலயம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
மோர் விற்ற கால் முடமான சிறுவனுக்கு காட்சி கொடுத்த
நடுதிட்டு ஆலயம்
திருவழிபாட்டு நேரங்கள் நாள்தோறும்
காலை 05.40 திருப்புகழ் மாலை
06.00 தமிழில் திருப்பலி
07.00 தமிழில் திருப்பலி(ஞாயிறு)
08.00 தெலுங்கில் திருப்பலி
09.00 மலையாளத்தில் திருப்பலி
10.00 ஆங்கிலத்தில் திருப்பலி
11.00 இந்தியில் திருப்பலி
பகல் 12.00 தமிழில் திருப்பலி
மாலை 05.00 தமிழில் திருப்பலி(ஞாயிறு)
06.00 ஜெபமாலை,நவநாள் ஜெபம்,தமிழில் திருப்பலி
முதல் வெள்ளிக்கிழமை
மாலை 06.00 திருப்பலி,திவ்ய நற்கருணை பவனி ,ஆசீர்
முதல் சனிக்கிழமை
மாலை 05.30 கடற்கரை சாலையில் அன்னையின் தேர் பவனி ,
நோயாளிகளை மந்திரித்தல்
திவ்ய நற்கருணை ஆசீர் ,திருப்பலி
09.00 மூன்று மணிநேர திவ்ய நற்கருணை ஆராதனை
சனிக்கிழமைகளில்
காலை 07.00 மாதா குளத்தில் திருப்பலி
மாலை 05.45 பேராலயத்தை சுற்றி அன்னையின் தேர்ப்பவனி திவ்ய நற்கருணை ஆசீர் ,திருப்பலி
சிலுவை பாதை மாடங்கள்
ஜெபமாலை தேவ ரகசியங்களின் மாடங்கள்
பழைய வேளாங்கண்ணி செல்லும்
புனித பாதையின் அமைந்து உள்ளன
வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத் துணியால் துடைக்கிறார்
இயேசு பூங்காவனத்தில் இரத்தவியர்வை வியர்த்தது
அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். லூக். 22:44-45
இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
இயேசு கசையால் அடிக்கப்பட்டது'
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.யோவா. 19:1
இயேசுவுக்கு முள்முடி தரிக்கப்பட்டது
அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ;ய10தரின் அரசரே, வாழ்க! ; என்று சொல்லி ஏளனம் செய்தனர்: மத். 27:28-29
இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்திக்கிறார்
இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
இயேசு உயிர்த்தெழுதல்
பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம் "திகிலுற வேண்டாம்: சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்: அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்: அவர் இங்கே இல்லை: இதோ, அவரை வைத்த இடம்." மாற். 16: 6,7
இயேசு விண்ணேற்றம் அடைதல்
இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். மாற். 16:19
தூய ஆவியாரின் வருகை
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்
அன்னை மரியாளின் விண்ணேற்பு
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்: உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்: தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவி;ல் கொண்டுள்ளார்:தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ".லூக். 1:44-55
அதிதூதர் கரியேல் கன்னி மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னது
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ;அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் ; என்றார்.இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ;மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ; என்றார். லூக். 1:26-33.
கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ;பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. லூக். 1:45
இயேசு மனித அவதாரம் எடுத்துப் பிறந்தது
கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். லூக்.2:5-7
இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுதல்
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.ஏனெனில், ;ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ; என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.லூக். 2:25
கோவிலில் இயேசுவைக் கண்டுபிடித்தல்
அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார் அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். லூக். 2:48
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
பால் விற்ற சிறுவனுக்கு காட்சி கொடுத்த
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
பால் விற்ற இடையர் குல சிறுவன்:
அன்னை மரியா, பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கண்ணியில் காட்சி அளித்தார். வேளாங்கண்ணி என்றால் விவசாய நிலம் என்று அர்த்தம். இங்கு இருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்தது. அந்த காலகட்டத்தில், பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார். அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர். அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர். பலரும் தங்கள் துன்பங்கள் தீர உதவுமாறு அன்னை மரியாவிடம் வேண்டிக்கொண்டனர்
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
மாதா குளம்
அன்னை வேளாங்கண்ணி -திரைப்படம் பகுதி-1
அன்னை வேளாங்கண்ணி -திரைப்படம் பகுதி-2
அன்னை வேளாங்கண்ணி -திரைப்படம் பகுதி-3
அன்னை வேளாங்கண்ணி -திரைப்படம் பகுதி-4
அன்னை வேளாங்கண்ணி -திரைப்படம் பகுதி-5
மாதா குளம்
பழைய வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி மாதா மாத இதழ்
வேளாங்கண்ணி குரலொலி
இன்றைய தலைமுறை காணாத
பழைய வேளாங்கண்ணி மாதா குளம்
இன்றைய தலைமுறை காணாத
பழைய வேளாங்கண்ணி
இன்றைய தலைமுறை காணாத
பழைய வேளாங்கண்ணி
இன்றைய தலைமுறை காணாத
பழைய வேளாங்கண்ணி மாதா குளம்
இன்றைய தலைமுறை காணாத
பழைய வேளாங்கண்ணி மாதா குளம்
இன்றைய தலைமுறை காணாத புதிய வேளாங்கண்ணி
புயலில் சிக்கிய போர்சுகீசிய மாலுமிகளின் கப்பலை வேளாங்கண்ணியில்
பத்திரமாக கரைசேர்த்த புதுமையால் முதலில் கட்டப்பட்ட புதிய வேளாங்கண்ணி.
இன்றைய தலைமுறை காணாத
புதிய வேளாங்கண்ணி
இன்றைய தலைமுறை காணாத
புதிய வேளாங்கண்ணி
இப்போதைய வேளாங்கண்ணி மாதா
பேராலய வரைபடம்
அன்றைய வேளாங்கண்ணி மாதா
அணிந்து இருந்த சேலை
வேளாங்கண்ணி மாதா தபால் முத்திரை
வேளாங்கண்ணி மாதா தபால் முத்திரை
வேளாங்கண்ணி மாதா தபால் முத்திரை
வேளாங்கண்ணி மாதாவின் புதுமைகளை உலகிற்கு
சாட்சியாய் சொல்லும் அருங்காட்சியகம்
புனித பாதை
ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா செய்த புதுமைகள்-
உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படமாக்கப்பட்ட வீடியோ


வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா செய்த சமீபத்திய புதுமைகளின் வீடியோ
This Blog is Created by
with blessings from VAILANKANNI MATHA
M.RAJARAM.ME.MCA(ENG).MBA.,
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.png)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.bmp)
.jpg)
.bmp)
.jpg)




















.bmp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)















.bmp)
.bmp)
.jpg)
.bmp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.bmp)
.jpg)
.bmp)
.bmp)
.jpg)
.bmp)
.jpg)
.bmp)
.jpg)
.bmp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
d.jpg)
w.jpg)
c.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


